தமிழகம்

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற காவிரி துலா உற்சவம்

17views
மயிலாடுதுறையில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவது தலமுமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு இன்று கருடக்கொடி ஏற்றப்பட்டது.
மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் உலக பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக கடைசி பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற சைவ ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இதேபோல் 108 திவ்ய தேசங்களில் இரண்டாவது திவ்ய தேசமும் பஞ்சரங்க ங்களில் ஐந்தாவது அரங்கமுமான திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் உலா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பரிமள ரெங்கநாதர் உற்சவ மூர்த்திகள் கோயில் பிரகாரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள செய்யப்பட்டார்.

தொடர்ந்து,  பட்டாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்வித்து மகாதீப ஆராதனை காண்பித்தனர். தொடர்ந்து துலா உற்சவ விழாவுக்கான தொடக்கமாக கருட கொடி ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தினந்தோறும் பெருமாள் வீதி உலா திருக்கல்யாண வைபவம் திருத்தேர் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற 15ஆம் தேதி கடை முக தீர்த்தவாரி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சிவ வைணவ தளங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு பத்து நாள் உற்சவம் துவங்கியுள்ளதால் மயிலாடுதுறை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!