தமிழகம்

காட்பாடி வள்ளி மலை சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் தமிழக அரசின் இலவச திருமண நிகழ்ச்சி !!

157views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி திருக்கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மணமக்களுக்கு 4 கிராம் தங்க மாங்கல்யம். ரூ 60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருள்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு திருமணம் நடந்தது.

குடியாத்தம் தாலுகா நெல்லூர் வேட்டையை சேர்ந்த கலைவாணன், அஷ்வினி தம்பதியருக்கு திங்கள்கிழமை காலையில் வள்ளிமலை கோயிலில் நடந்தது.  இதில் காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன், பெருமாள்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரன், கோட்டநத்தம் நாட்டாண்மைதாரர்கள் வேல்முருகன், ராஜேந்திரன், மேல்பாடி வருவாய் ஆய்வாளர் சுஜாதா, விஏஓ யோகேஷ்வரன், செயல் அலுவலர் சங்கர், காட்பாடி சரக ஆய்வாளர் சிவராமகிஷ்ணன், செயல் அலுவலர்கள் சிவாஜி, மலை வாசன், பிரகாஷ், கோயில் எழுத்தர் ராஜ்குமார், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!