தமிழகம்

வேலூர் மருத்துவர் அருச்சுனன் 5-ம் ஆண்டு குருபூஜை விழாவில் பங்கேற்ற அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு !!

51views
வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் ஸ்ரீ புற்று மகரிஷி பாரம்பரிய வைத்தியர் கே.பி.அருச்சுனனின் 5-ம் ஆண்டு குரு பூஜை முன்னிட்டு காலையில் அமிர்த சஞ்சீவ யாகம் நடத்தப்பட்டது. அருச்சுனன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை மற்றும் பகல் அன்னதானம் வழங்கப்பட்டது.
குருபூஜையை அப்பாஜி சுவாமிகள் துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு கலந்து கொண்டார். காட்பாடி வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை குருகுல மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!