329
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஸ்ரீ ஸ்ரீ குரு அற்புத ராகவேந்திரர் 358- வது ஆராதனை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ராகவேந்திர திருவுருவச் சிலையை திருத்தேரில் வைத்து நாதஸ்வரம், சிங்கார மேளம், மங்கையர் கோலாட்டம் முன் செல்ல பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ராகவேந்திர நாமம் சொல்லி திருத்தேர் வடம் பிடித்தனர்.
திருத்தேர் கோவில் முன்பிருந்து புறப்பட்டு ரத வீதியை சுற்றி பின்னர் கோவில் முன்பு வந்தடைந்தது. வழிநெடுக பழத்தட்டுடன் கற்பூரம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அருந்துவதற்கு ஆரோக்கியத்திற்கு உகந்த பானகம் வழங்கப்பட்டது. சமூக சேவகர் மருத்துவர் தி .கோ. நாகேந்திரன் பொதுமக்களுடன் இணைந்து திருத்தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றார்.
கோயிலில் நடைபெற்ற சமபந்தியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் ரெ. மகேஷ் தொடங்கி வைத்தார். திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ ஸ்ரீ குரு அற்புத ராகவேந்திரா அறக்கட்டளையின் நிறுவனர் ஐயப்பன் ஏ.ஆர். ஜூவல்லர்ஸ், பி. எஸ். டி. டிரஸ்ட் நிறுவனர் ராம் சூரஜ் மற்றும் பக்தர்கள் இணைந்து விமர்சியாக நடத்தினார். பொதுமக்ள் இறைவனை வேண்டி அறுசுவை உண்டு நல்லாசி பெற்று அமைப்பாளர்களை வாயார வாழ்த்தி சென்றனர்.