தமிழகம்

வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி கோயிலில் ஆடிக் கிருத்திகை தெப்ப திருவிழா

121views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு பரணி காவடி, கிருத்திகை காவடிகளை நேர்த்தி கடனாக பக்தர்கள் செலுத்தினர். அங்கு உள்ள சரவணபொய்கை குளத்தில் வள்ளி, தெய்வானை, முருகன் சமேதமாக பூப்பல்லக்கில் தெப்பம் சுற்றிவந்தது திரளான பக்தர்கள் வழிப்பட்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, திருக்கோயில் பணியாளர்கள் விழாக்கமிட்டினர் செய்து இருந்தனர்.
வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆடி பரணி, ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. 3 நாட்கள் தெப்ப திருவிழா ஆறு முக்கோண வடிவிலான குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகள் தெப்பத்தில் வலம் வந்தன. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை, செயல் அலுவலர் சங்கர், திருக்கோயில் பணியாளர்கள் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!