தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா முன்னிட்டு கொடிமரத்தில் மயில்கொடி ஏற்றம்

81views
வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி விசாகம் தேர்த் திருவிழா முன்னிட்டு 4-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கியது. மலைக்கோயிலில் மயில்கொடி ஏற்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் நடந்தது. பின் விநாயகர் ஊர்வலம் நடந்தது.
வரும் 9ம் நாள் 30-ம் தேதி சனிக்கிழமை காலை திருத்தேர் மலையை சுற்றி வலம் வரும். இதில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!