தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம்

104views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு பெருமாள், தாயாருக்கு திருவோண தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் தாயார், பெருமாளுக்கு (திருமஞ்சனம்) பால்,தயிர், தேன், சந்தனம், ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து திருவோண தீபம் ஏற்றப்பட்டது. பின் ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜையும் நடந்தது.
பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு அனைவருக்கும் சாம்பர்சாதம், புளியோதரை, சுண்டல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!