இந்தியா

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் 1.14 கிலோ தங்க தாமரை நெக்லஸ் வைர ஆபரணங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமி யாத்திரை நிகழ்ச்சி

162views
ஆந்திர மாநிலம் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி திதியை முன்னிட்டு பஞ்சமி தீர்த்தத்தின் இறுதிகட்டமாக (சக்ரங்னானம்) திரளான பக்தர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.பத்மபுஷ்கரிணியில் புனித ஸ்நானம் செய்த எண்ணற்ற பக்தர்கள் ஆன்மீக நல்லிணக்கம் அடைந்தனர். பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு திருப்பதி – திருமலை ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ரூ.1.31 கோடி மதிப்புள்ள 1.14 கிலோ தங்கதாமணி, நெக்லஸ், வைர ஆபரணங்களுடன் புடவையும் திருப்பதி புறவீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

பஞ்சமி யாத்திரை நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை மதியம் 12.10 முதல் 12-20-க்குள் சிறப்பாக நடைபெற்றது. சக்கரத்தாழ்வாருடன் வந்த பக்தர்கள் பத்மபுஷ்கரிணியில் ஸ்நானம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!