தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த இராம பக்தன்

151views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. அங்கு ஆங்கில மாதம் முதல் வாரத்தில் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்படும், அதன்படி காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், வடைமாலை சாத்தப்பட்டும் காலை,மாலை என 2 வேலையும் பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.பின் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!