69views
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் பூங்கோடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் திருக்கோவில் வளாகத்தில் இடம் பெற்றிருக்கும் அருள்மிகு சீதாராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா டிசம்பர் 30 ஆம் தேதி கோவில் வளாகத்தில் முறைப்படி பூஜை மற்றும் பஜனைகள் வழியாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காலை 7 மணிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைப்பெற்றது. வெண்ணெய் காப்புடன் வடைமாலை சாற்றிய அனுமான் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். முந்திரி, அத்திப்பழம், பிஸ்தா, ஏலக்காய் அலங்காரத்துடன் அனுமனை அலங்கரித்திருந்தனர்.
பக்தர்களுக்கு காலையும் மதியமும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வள்ளிமலை ஆதீனம் வருகை தந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
சுபராம கோவிந்தராசனார் குழுவினரின் பஜனை நடைபெற்றது.
வளாகத்தில் வீற்றிருக்கும் நித்திய வெங்கடேச பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் செய்யப்பட்டது.
கன்னியப்பன் ஸ்வாமிகள் இந்த சிறப்பு பூஜையை செவ்வனே நடத்தினார்.
முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பெரும்திரளாக இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
add a comment