தமிழகம்

வேலூர் அருகே வெட்டுவாணம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடிவெள்ளி பெருவிழா மற்றும் பிரம்மோற்சவ விழா துவக்கம் !!

136views
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணத்தில் பிரசித்திபெற்ற அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் உள்ளது. இதில் ஆடிவெள்ளி ஒன்று முதல் ஒன்பது வரை சிறப்பாக நடைபெறும், முதல் வெள்ளி கடந்த 18-ம் தேதி துவங்கியது. 2-வது வெள்ளி 25-ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஒன்பதாம் வெள்ளி செப்-12-ம் தேதி வரை நடைபெறும், அதேப்போல் வரும் 2-ம் தேதி பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடி ஏற்றம் நடைபெறும் 8-ம் தேதி திருத்தேர் இழுக்கும் விழா நடைபெற உள்ளது. ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு புஷ்ப அலங்காரம், உற்சவர் ஊர்வலம் நடைபெறும், திரளான பக்தர்கள் இதில் கலந்துகொள்வார்கள். ஏற்பாடுகளை வேலூர் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அனிதா, துணை ஆணையர் கருணாநிதி, உதவி ஆணையர் சங்கர்.மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அசோகன், கோயில் செயல் அலுவலர் நடராஜன், ஆய்வர் செண்பகம், தக்கர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!