வேலைவாய்ப்பு

TCS நிறுவனத்தில் BCA, B.Sc பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

173views

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற BCA, B.Sc பட்டதாரி இளைஞர்களுக்கு ‘ஸ்மார்ட் ஹையரிங்’ திட்டம் மூலமாக வேலைவாய்ப்பினை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பையை தளமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற இளங்கலை கணினி விண்ணப்பம் (BCA) மற்றும் இளங்கலை அறிவியல் (B.Sc) பட்டதாரிகளை ‘ஸ்மார்ட் ஹையரிங்’ (‘Smart Hiring’ ) மூலம் பணியமர்த்த உள்ளது. மேலும், ‘ஸ்மார்ட் ஹையரிங்’ தேர்வு செயல்முறையில் சிறப்பாக செயல்படும் விண்ணப்பதாரர்கள் TCS Ignite – ‘Science to Software’ திட்டத்தில் சேர வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2021 ஆகும்.

கல்வித்தகுதிகள்

BCA, B.Sc (கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், உயிர் வேதியியல், கணினி அறிவியல், IT), கணினி அறிவியலில் இளங்கலை (B.Voc) (CS)/IT இல் 2020, 2021 ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முழு நேரமாக கற்று, 2022ம் ஆண்டு தேர்ச்சி பெற உள்ளவர்கள் தகுதியானவர்கள். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களும் முழுநேர பட்டப்படிப்புக்காக தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 5 அல்லது 50% என்ற சராசரி புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை

தேர்விற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் முதலில் TCSன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் TCS https://nextstep.tcs.com/campus/ Next Step portal க்கு செல்ல வேண்டும்.

நீங்கள் முன்னதாக பதிவு பெய்யப்பட்டிருப்பின், உங்களின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அதை சமர்ப்பித்து, ‘Apply For Drive’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

முன்னதாக பதிவு செய்யாத புதிய பயனராக இருந்தால், ‘Register Now’ என்பதைக் கிளிக் செய்து, ‘IT’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர், உங்கள் விவரங்களை நிரப்புவதற்கு தொடர வேண்டும்.

உங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து, ‘Apply For Drive’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பும் சோதனை முறையை தேர்வு செய்து ‘Apply’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்ய ‘Track Your Application’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில், ‘Applied for Drive’ என்று இருந்தால் உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!