திருமங்கலம் பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் குறைந்த விலை மது பாட்டில்கள் , தனிப்பட்ட நபருக்கு பதுக்கல் செய்து அனுப்புவதாக குடி பிரியர்கள் குற்றச்சாட்டி, மதுபான கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
269views
(குறைந்த விலை மதுபாட்டில்களை தனிப்பட்ட நபர் மொத்தமாக பெற்றுக்கொண்டு , கிராமங்களில் இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு)
மதுரை மாவட்டம் திருமங்கலம், புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடைகளில் குறைந்த விலை மது பாட்டில்களை , மது பிரியர்களுக்கு விற்பனைக்கு வழங்காமல் , தனிப்பட்ட நபர்களுக்கு அதிக விலைக்கு விற்க, கடை விற்பனையாளர்கள் பதுக்கி வைப்பதால் , மது பிரியர்கள் குறைந்த விலை மது பாட்டில்களை பெற முடியாமல் குற்றம் சாட்டி, மதுபான கடை முன்பு அமர்ந்து மது பிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் மற்றும் பன்னிக்குண்டு ,காங்கேய நத்தம், செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் ஹனி பீ 130/- ரூபாய்க்கு விற்கப்படும் சரக்குகள் , மொத்தமாக தனிப்பட்ட நபர்கள் அதனை 140/- ரூபாய்க்கு அனைத்து மது பாட்டில்களையும் பெற்றுக்கொண்டு , கிராமப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






