தமிழகம்

தமிழ் புத்தாண்டு, கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

78views
மதுரை அருகே உள்ளது, அழகர்கோவில் ஆகும். தமிழ் புத்தாண்டு ஒட்டி அழகர் மலை மேல் உள்ள நூபுரகங்கையில், பக்தர்கள் புனித நீராடி, அங்குள்ள ராக்காயி மலை வழிபட்டு தொடர்ந்து, வரும் வழியில் உள்ள ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவிலில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானுடன் சிறப்பு அலங்காரத்தில் இருந்தார் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து, ஸ்ரீதேவி பூமாதேவியுடன் காட்சி அளிக்கும் சுந்தர்ராஜப் பெருமாளையும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கல்யாண சுந்தரவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆண்டாள்,  காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். 10,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயில் நிர்வாக அதிகாரி ராமசாமி மற்றும் ஆலயம் பணியாளர்கள், சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.  மதுரை நகரில் மீனாட்சியம்மன், தெப்பக்குளம் மாரியம்மன்,மதுரை அண்ணாநகர் மேலமடை சௌபாக்ய விநாயகர், சர்வேஸ்வரன் கோயில், சித்தி விநாயகர் ஆலயம், தல்லாகுளம் பிரசன்ன வெங்கிடஜலபதி, பூங்கா முருகன் கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமிகளை வழிபட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!