archiveநான் மீடியா

தமிழகம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம்: பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி

கும்பகோணம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு காலை குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், அரசியல் கட்சியினர், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில்...
சினிமாவிமர்சனம்

இரவின் நிழல் -திரை விமர்சனம்

சிங்கிள் ஷாட்டில் ஒரு முழுத்திரைப்படம் அதுவும் நான்லீனியரில். சாத்தியமான்னு கேட்டால் ஏன் முடியாது என்ற கம்பீர கேள்வியுடன் களம் புகுந்திருக்கிறது 'இரவின் நிழல்' இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆச்சர்யங்களின் உக்கிரமான பெயர். எதிலும் ஒரு புதுமை. புருவங்களை உயர்த்தி கண்களால் வியப்புகளையும், பிரமிப்புகளையும் அனாயசமாக பதிவுசெய்யும் கோடம்பாக்கத்து ஆஸ்கார் கலைஞன். அடுத்தவர் சாதனையை முறியடித்து தம்சப் காட்டுபவர்களுக்கு மத்தியில் தனது நேற்றைய சாதனையை தானே முறியடித்து அசால்ட்டாக வலம் வருகிறார் பார்த்திபன்....
விளையாட்டு

குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற வீரர் பலி: எதிராளி தாக்கியதில் உயிரிழந்த சோகம்

மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ், தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் நிகில்(வயது 23). இவர், குத்து சண்டை வீரர் ஆவார். பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஞானஜோதிநகர், பை இன்டர் நேஷனல் கட்டிடத்தின் 5-வது மாடியில் கடந்த 9-ந்தேதி கிக் பாக்சிங் கர்நாடகா என்ற பெயரில் குத்து சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில், மைசூரு மாவட்ட பிரிவில் இருந்து நிகில் கலந்து கொண்டார். அவருடன் பயிற்சியாளர் கிரண்,...
விளையாட்டு

புதுக்கோட்டையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு மாரத்தான்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

ஜூலை 28-ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் ஜூலை 28ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர்...
உலகம்உலகம்

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா

இத்தாலியில் அரசாங்க நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மரியோ ட்ராகி வியாழன் அன்று ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். முன்னதாக செனட்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் டிராகி வெற்றி பெற்றார்.பிப்ரவரி 2021 இல் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவால் டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. "இன்றிரவு குடியரசுத் தலைவரிடம் எனது ராஜினாமாவை சமர்ப்பிப்பேன் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்," என்று டிராகி கவுன்சில் கூட்டத்தில் கூறினார்....
உலகம்உலகம்

இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே

முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. அதிபர் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. 13ம் தேதி ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாலத்தீவு சென்ற அவர் அங்கிருந்தபடி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தார். அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வெடித்த...
இந்தியா

இன்று முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ்

இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, டெல்லியில், அமைச்சர் மன்சூக் மாண்டவியா தொடங்கி வைத்தார். ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த...
இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை: ஒன்றிய பாஜக அரசு அடுத்த அதிரடி

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் நேற்று வெளியிட்டது. அதில், 'வாய்ஜாலம் காட்டுபவர், சின்னஞ்சிறு புத்திக்காரர், கொரோனா பரப்புவர், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு முறைகேடு, நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, கோழை, கிரிமினல்,...
தமிழகம்

நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் தனது இல்லத்தில் இன்று காலை 8 மணிக்கு காலமானவர். பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு என 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெற்றி விழா, லக்கி மேன், மகுடம் என பல படங்களை இயக்கி உள்ளார். ஆயிரத்தில் ஒருவன், அமரன், படிக்காதவன் என பல படங்களில் அவர் நடித்துள்ளார். இறுதியாக கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் நடித்திருந்தார்....
1 471 472 473 474 475 539
Page 473 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!