“தமிழ் நாவலாசிரியர்களில் தனித்த சிறப்புக்குரியவர் வெண்ணிலா” மேனாள் நீதிபதி பிரதிபா ஸ்ரீதேவன் புகழாரம்
சென்னை ; மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்திய எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்க நிகழ்வில், தமிழ் நாவலாசிரியர்களுள் தனித்துவமும் சிறப்புமுடைய எழுத்துக்குச் சொந்தக்காரராக அ.வெண்ணிலா திகழ்கிறார் என்று உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி பிரதிபா ஸ்ரீதேவன் புகழாரம் சூட்டினார். தமிழ்ப் படைப்புலகில் கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், திறனாய்வாளர் என பன்முக அடையாளங்களோடு கடந்த...