archiveகவிதை

கவிதை

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ

சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா சாலையும் கூட்டமில்லா சந்தையும் தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும் மனிதமும்... ஓ!!! வீரியம் கொண்ட எதிரியே உன் கிரீடத்தின் அர்த்தம் இன்றுதான் புரிந்தது.. இருந்தாலும் ஒன்றை மட்டும் மறக்காதே வருவான் ஓர் நாள் உன்னையும் வீழ்த்தும் சக்திமான்.. அதுவரை... நின்று திணறும் சுவாசமும் பீதியில் கதவடைப்பு நடத்துமே...!!! மஞ்சுளாயுகேஷ்  ...
கவிதை

குழந்தை மனது

கூரை வீட்டுக்குள் கொட்டும் மழை; குழந்தை மனதிற்குள் குடைக்குள் மழை! சாலையில் நேற்றய மழைநீர் வெள்ளம்; குழந்தை மனதிற்குள் காகிதக் கப்பல்! நிரந்தர வேலையில்லை அப்பாவின் நடைமுறை; குழந்தை மனதிற்குள் ஞாயிறு விடுமுறை! வேளைக்கு உணவில்லை அம்மாவின் வேதனை; குழந்தை மனதிற்குள் சாம்பலில் பூனை! கொடுக்கப் பாலில்லை அம்மாவின் ஏக்கம்; குழந்தை மனதிற்குள் விரல்சூப்ப விருப்பம்! தெருவிளக்கில் படிப்பு அண்ணனின் அவதி; குழந்தை மனதிற்குள் ஞானத்தின் ஜோதி! அக்காவின் உடைந்த...
Uncategorizedகவிதை

அறவோர் அடிப்படை

உண்மை அறி நன்மை புரி தீமை எரி - இந்தத் திரட்சியே பெளத்த நெறி! * நன்மையின் தொகுப்பு அன்பம்! தீமையின் தொகுப்பு வன்மம்! * நல் மனம் நறுமணம் நாலாபக்கமும் வீசும் பூக்களின் குணம்! நல் எண்ணம் நல்லொழுக்கம் நன்மை பேசும் சந்தன மணம்! தம்மம் தலையாகும் கம்மம் வினையாகும்! * இன்றைய நன்மையால் என்ன பயன் என எண்ணும் ஏ மனிதா! நாளைய வரலாறு சொல்லும் உன்...
கவிதை

பிரபா முருகேஷ் – கவிதைகள்

என்னிடம் கேட்பாயா நீ மனதின் .... சலனங்கள் கேள்விகள் விசாரணைகள் கூச்சல்கள் எண்ணத்தின் பரிபாஷைகள் விஷமத்தின் பகடிகள் தங்கு தடையற்ற கற்பனைகள் நீயாக நான் வியாபிக்கும் தருணங்கள் வெண்பஞ்சு மேகங்களை அழைத்து செல்லும் வானம் போல அனைத்துக்கும் செவி சாய்க்கும் புத்தியின் கொண்டாட்டங்களை மழையின் ஈரத்தை உள் வாங்கும் பெண்ணாக ......... என்னிடம் கேட்பாயா நீ சாதிகளற்ற சமுதாயத்தில் சாதிகளற்ற சமுதாயத்தில் குழந்தைகள் பயமின்றி தெருக்களில் விளையாடும் விளையாட்டு முற்றத்தில்...
கவிதை

இரக்கம் சுரக்கம் இறைவன் கரம்

எங்கும் எதிலும் இன்னும் மிச்சமிருக்கிறது ஈரம்... மனிதாபிமானம் என்பது மனதின் ஈரம்... விழிகளில் நீரிருக்கும் காலமெல்லாம் இருக்கும்... கடலில் அலையிருக்கும் காலமெல்லாம் சுரக்கும்... எங்கேயோ ஓர் இடறல் கேட்டால் இதயம் துடிக்கிறதே... எங்கேயோ ஓர் அரற்றல் கேட்டால் கண்ணீர்த் துளிர்க்கிறதே... வெயில் கொளுத்தி நாவறளும் வேளைகளில் எல்லாம் வந்து கொட்டும் மழையைப்போல வந்து கைகொடுக்கிறது மனிதாபிமானம்... பெருமழைக் காலங்களில் படகுகளின் துடுப்புக்களின் துழாவல்களில் நீங்கள் அதைப் பார்க்கலாம்... இந்துத்தாய் பெற்றெடுத்த...
இலக்கியம்கவிதை

இதழ்களை பொறுக்கி புத்தகங்களில் பதியம் வைக்கிறேன்……!

கில்லி மாதிரி நல்ல ஒல்லி அவள் துள்ளல் நடை. துவளும் ஒற்றை ஜடை இடை தினம் ஒரு ரோஜா சூடி கலகலச் சிரிப்புடன் கலக்கலாகவே ஒரு நடை நடப்பாள் நடையின் அதிர்வில் ரோஜா இதழ்கள் உதிரும் அவளறியாமல் இதழ்களை பொறுக்கி புத்தகங்களில் பதியம் வைப்பேன்.. சில இதழ்களை தின்று சுகித்த தினங்களும் உண்டு நல்ல நிறம் அவள் அரிசிப் பல்லும், கூர் நாசியும், குருவி இதழ்களுமாக தெருவின் புதிய வசீகரம்...
கவிதை

இளைஞனே… சிந்தி!

திரையினில் ஆடும் நடிகனின் காலில் தீபங்கள் காட்டுகிறாய்! - ஒரு திருவிழாப் போலக் கூடிக்-கொண் டாடித் தெய்வமாய்ப் போற்றுகிறாய்! மரவடி வான மாபெரும் உருவில் பாலினை ஊற்றுகிறாய்! - அட! மடையனே! ஏன்-நீ பெற்றவர் தம்மைச் சோறின்றி வாட்டுகிறாய்! புதுப்படம் வந்தால் முதன்முதல் நாளே புயலெனப் பாய்கின்றாய்! - உள்ள பொறுப்பினை மறந்து, பிழைப்பினைத் துறந்து வெயிலினில் காய்கின்றாய்! மதிப்பிட முடியாப் பொழுதினைக் கொன்று மகிழ்ச்சியைத் தேடுகின்றாய்! - பெரும்...
கவிதை

மகளென்னும் தேவதையே

மகள்கள் தினமாம் இன்று.... மகளென்னும் தேவதையே..... வாசித்தேன் ஆசை தீர.... இரசித்தேன் அளவில்லாமல்.... சுவாசித்தேன் உனையே மூச்சாக ஏந்தினேன் உன்னை உயிராக.... கண்டேன் அழகிய உலகம் உன்னில்... மகிழ்ந்தேன் உன் தாயாக.... வாழ்வை வசந்தமாக்கிய அழகு தேவதையே....உன் அன்பு அத்தனையும் தருவாயா எல்லையில்லாமல்.... வாழ்வேன் தொல்லையில்லாமல்...!!! கோமதி, காட்பாடி...
கவிதை

பாரபட்ச தேசம்

இது பாரபட்ச தேசம் அரசால் வந்த நாசம். புண்ணிய பூமி, வெளி வேசம் திருட்டுத்தனத்தில் ஆவேசம். தூய்மை இந்தியா, குப்பைகள் அள்ள குப்பைகளாய் குழந்தைகள் மனதால்துள்ள, பணிவிடை பெற்று இறுமாப்பில் அனுபவிக்கும் செல்வந்தன் நகைத்து எள்ள. உலையில் சோற்பார்த்து தலையில் எண்ணை பார்த்து இடையில் உடைபார்த்து இவைமட்டல்ல, கொடுமைகள் பல பார்த்து விடியலில்லா முகம் பார்த்து. மதமில்லை இனமில்லை தாயில்லை தந்தையில்லை ஓய்வெடுக்க இடவுமில்லை சீரில்லை சிறப்பில்லை பகுத்தாய கல்வியுமில்லை....
கவிதை

வேய்ங்குழலோசை சிரிக்கும் பிள்ளைத்தமிழ்

புள்ளினங்களின் இசையோடு புலரும் அதிகாலையின் அழகில், பூத்துக்குலுங்கும் மலர்களின் புன்னகையில், துள்ளித்திரியும் மான்களின் துறுதுறுப்பில், தோகை விரித்தாடும் வண்ணமயிலின் நடனத்தில், குயிலின் இனிய கானத்தில், ஆர்ப்பரிக்கும் அருவியின் கம்பீரத்தில், சலசலக்கும் ஓடையில் துள்ளிகுதிக்கும் மீன்களின் எழிலில், வெண்பனி இரவின் முழுமதி அழகில், மயக்கும் வேய்ங்குழலோசையில், கள்ளமில்லா பிள்ளைச்சிரிப்பழகில் நின் முகவடிவே கண்டேனடா...... என் மாயக்கண்ணா.......!!! கோமதி, காட்பாடி...
1 6 7 8 9
Page 8 of 9

Right Click & View Source is disabled.

error: Content is protected !!