ஒற்றைச் சொல் சோபனம்… திருநபி தின விழா/ மீலாதுக் கவிதை
சுவனங்களுக்கான பட்டோலைகளை நபிகள் எழுதினார்கள் ... அதனை இறைவன் எந்த மறுப்பும் இல்லாமல் அங்கீகரித்தான்... அவர்களின் வாய்ச்சொற்கள் சுவனங்களில் சூட்டப்படும் பொற்கடகங்களாகவும் மணிமகுடங்களாகவும் ஆகின... நபிகள் பெருமான் நன்மைகளை முன்னிறுத்திப் பேசுகிற போதெல்லாம் சுவனத்திற்கான ஒரு சுந்தர மனிதர் "நபிகளே...! எங்கள் நாயகப் பெருமானே...! அந்தக் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதா"? என நெக்குருகும் வேளைகளில்... "ஆமாம்... அந்தக் கூட்டத்தில் நீங்களும் உண்டு" என்று நபிகளார் சோபனம் சொன்னார்கள்......