சர்வதேச மகிழ்ச்சி தினம்
அத்தாவுல்லா நாகர்கோவில் என்றைக்கு இந்த நாட்டில் ஏழை சிரிக்கிறானோ.... என்றைக்கு உழவன் வயிறார உண்கிறானோ... என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவிலும் தனியாக நடந்து போக முடிகிறதோ... என்றைக்கு தாழ்த்தப்பட்டவனும் கல்வியால் தலைநிமிர்கிறானோ... என்றைக்கு நீதியும் நேர்மையும் இல்லாதவன் கைகளுக்கும் எளிதாக எட்டுகிறதோ... என்றைக்கு நல்லவர்கள் நாடாள வருகின்றார்களோ... என்றைக்கு மக்கள் குடியுரிமை பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றனவோ... என்றைக்கு கொள்ளை நோய்களும் கொத்துக் கொத்தான மரணங்களும் இல்லாது ஒழிகிறதோ.... எங்கே குழந்தைகள் கொண்டாடப்படுகிறார்களோ......