அறியப் பட வேண்டிய அரிய பெரும் வீர கலை
“வருசெருவொன் றின்மையினான் மற்போரும் சொற்புலவோர் வாதப் போரும் இருசிறைவா ரணப்போரும் இகன்மதவா ரணப்போரும் இனைய கண்டே.” என்ற கலிங்கத்துப்பரணி பாடலை தந்த செயங்கொண்டர் பாடலின் படி பண்டைய காலத்தின் கலைப்பொக்கிஷம் இந்த "மற்போர்" ஆம் ! மதம் பிடித்த இரு யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சியையும், "மற்போர் எனப்படும் மல்யுத்த சண்டையையும் பொழுது போக்காக மட்டுமின்றி வீரர்களின் யுத்தம், மற்றும் தேகப் பயிற்சியாகவும் ஒன்று படுத்தி கண்டுள்ளனர்...