archiveஇலக்கியம்

கவிதை

ஒவ்வொரு விடியலும்

சேவல் கொக்கரிக்க பறவைகள் சிறகடிக்க கரும் போர்வை விளக்கி கதிர்விசி எழுந்தது பரிதி மேகங்கள் விலக செவ்வந்தி பூ போல செம்மஞ்சள் பந்தாக தெரிந்தான் ஆதவன் கதிரவனின் கதிர் பட்டு கரும்பச்சை வயல்கள் வெளிர் பச்சை நிறமாக கண் கொள்ளாக் காட்சி ஒவ்வொரு விடியலும் தினம் நமக்கு சொல்லும் இரவானால் பகல் ஒன்று நிச்சயம் உண்டு இருள் மட்டும் வாழ்வல்ல விடியலும் தினமுண்டு நம்பாத மனிதருக்கும் இவ்வுண்மை தினமுண்டு க.அகமத்...
இலக்கியம்நிகழ்வு

“ஆதிராவின் மொழி ” நூல் வெளியீடு

ஷார்ஜாவில் நடைபெற்ற 41 வது சர்வதேச புத்தக கண்காட்சியில் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் ஒருங்கிணைத்த கேலக்ஸி பதிப்பகத்தின் வெளியீடாக ஆதிராவின் மொழி என்ற நூல் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 4:25 வரை வெளியிடப்பட்டது. எழுத்தாளர் சிவமணி அவர்களின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்து இருக்கிறது ஆதிராவின் மொழி. Booktopia நிறுவனர் திருமதி. மலர்விழி அவர்கள் வெளியிட, அமீரக எழுத்தாளர்/சமூக...
கட்டுரை

வெண்ணிற இரவுகளில் நான்

இரவு என்பது தனி அழகுடையது. நீண்ட மலைப்பாம்பை போல அது ஊர்ந்து செல்லும் பாங்கு...... அதனுள்ளே நம்மை அத்தனை அழகாய் பொருத்தி விடுகிற இயல்பு...... என அத்தனையுமே இரவிற்கான தனி சிறப்புகள் என்றே சொல்லலாம். இரவு என்பது குறைந்த ஒளி என்றும் சொல்வார்கள். சில இரவுகள் நீண்டதாய் இருக்கும்; சில இரவுகள் சட்டென்று முடிந்து விடும் ; சில இரவுகள் கதைகளாய்; சில இரவுகள் சிந்தனையாய் என என்றும் இனிமைகளாய்...
நிகழ்வு

அமீரக சார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஒரே மேடையில் வெளியிடப்பட்ட தாய் மற்றும் 6 வயது மகள் எழுதிய புத்தகம் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது

ஐக்கிய அரபு அமீரகம் - சர்வதேச சார்ஜா புத்தகக் கண்காட்சி : அமீரக சார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஒரே மேடையில் தாய் மற்றும் 6 வயது மகள் எழுதிய புத்தகம் உலகச் சாதனைப் புத்தகத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது. சார்ஜா 41வது புத்தகக் கண்காட்சியில் 5-11-2022 அன்று ஈரோட்டில் பிறந்து துபாயில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் முனைவர் ஸ்ரீ ரோகிணி அவர்கள் எழுதிய ஐந்தாவது புத்தகம் "ஈர்ப்பு விதி 2"...
சிறுகதை

இரவல்

விடியற்காலை பகலவன் வர இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும் இருப்பினும் காய்கறி வண்டி காத்திருக்காது.காய்கறி வண்டியின் சத்தம் கேட்டு மெல்ல எழுந்து வந்தான் ராஜா கதவை திறக்க. அதற்குள் தெருவே விழித்துக்கொள்ளும் அளவிற்கு ஒலி ஓயாமல் அடித்தான் காய்கறி வண்டிக்காரன். “தம்பி அந்த சத்தம் கொஞ்சம் நிறுத்து பக்கத்துல எல்லாம் சத்தம் போடுவாங்க” என்றான் ராஜா. “ எனக்கு லேட் ஆச்சு நீங்க இவ்ளோ மெதுவா வந்த...
கட்டுரை

பேராசிரியர் நா. இராமச்சந்திரனின் “துடியான சாமிகள்: வில்லுப்பாட்டும் சமூகச் சிக்கல்களும்” : நூல் அறிமுகம்

பல்லாண்டுகளுக்கு முன் சென்னையிலிருந்து மக்கள் வெளியீட்டின் வெளியீடாக வந்த இந்த நூல் மீண்டும் என்.சி.பி.எச். வெளியீடாக ஒருசில ஆண்டுகளுக்கு முன் தமிழுலகுக்குக் கிடைத்தது. என் சி பி எச் வெளியீடாக வந்தபோதே இந்நூலை நான் படித்திருந்தேன். அண்மையில் இந்நூலை மறுபடியும் வாசிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. மீண்டுமொருமுறை வாசித்தபோது அது உண்மையில் ஒரு மறு வாசிப்பாக அமைந்ததுவிட்டது. இதனால்தான் இந்நூலைப் பற்றிய அறிமுகத்தை எழுதுமாறு என் மனம் தூண்டியது. சென்ற நூற்றாண்டின்...
கட்டுரை

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி – நூல் அறிமுகம்

நூலின் பெயர் : சிறகடிக்கும் பட்டாம்பூச்சி நூல் ஆசிறியர் : சு.பிரவந்திகா ( 7 வயது ) வகுப்பு : 2 வெளியீடு : லாலிபாப் சிறுவர் உலகம் கொரோனா பொது முடக்கத்தின் போது பத்தக நண்பன், லாலிபாப் சிறுவர் உலகம், KTS,முகிழ் போன்ற புலனக் குழுக்கள் குழந்தைகளுக்கு இனைத்து பல இனைய நகழ்வுகளை நடத்தினர். கொரோனா காலத்தை வசந்த காலமாய் மாற்றியுள்ளனர். இந்த குழுக்களில் இனைந்து தான் வாசித்த...
கவிதை

அன்புத்தோழி ஜெயஸ்ரீ : கவிதைகள்

ஆ சொல்லு சோறு ஊட்டினாய் நசுக்கிப் பிசைந்து குழைந்து கலந்து கால இடைவெளிகளோடு நாவில் பூசியதன் நாமங்கள் பல ஈரம் வடித்து வெந்த அச்சோற்றில் இத்தனைப் பூசணிக்காய்களையா மறைப்பாய் பொறுமை அமைதி தத்துவம் தீர்வு என்ற பெயரில் விலகல் புறக்கணிப்பு ஏமாற்று துரோகம் உனதான தப்பித்த வழங்கலை மென்று முழுங்குவேன் சோறல்ல முகத்தில் பூசிய சேறென்று தெரிந்த பின்னும் புழுவாகிய நான் ஆதிவாசியின் சிறுசுடர் நீயாகவே விலகினாய் அனல் பொழியும்...
கட்டுரை

உலகத்திரைப்பட விழாத் திரைப்படங்கள்

ஹாலிவுட்: கடந்த ஆண்டுகளில் வெளியான அமெரிக்க த் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கதாய் சம்வேர், , பிரிசியஸ் ஆகியவற்றைச் சொல்லலாம். சம்வேர் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. ஹாலிவுட்டின் திரைப்பட நடிகரான ஜானி வழக்கமான திரைப்பட நட்சத்திரத்தின் புகழையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டவன். மனைவியுடன் ஏற்பட்ட சிக்கல்களால் பெரிய விடுதி ஒன்றில் இருந்து வருபவன். அவனின் மனைவி 11 வயது மகளை அவனிடம் ஒப்படைக்கிறான்.. அவன் போகுமிடங்களுக்கு...
கட்டுரை

என் ஆத்திசூடி – நூல் விமர்சனம்

நூலின் பெயர் : என் ஆத்திசூடி நூல் ஆசிரியர் : சு.த.குறளினி ( வயது 13 ) வகுப்பு : 8 முதற்பதிப்பு : பிப்ரவரி 2020 ஓவையின் ஆத்திசூடி, பாரதியின் ஆத்திசூடி தெரியும். அதென்ன 'என் ஆத்திசூடி'... தற்போது +1 படித்துக் கொண்டிருக்கும் இளந்தளிர் குறளினியின் ஆத்திசூடி தான் இது. குழந்தைகளுக்காக ஒரு குழந்தையே எழுதி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இளம் எழுத்தாளர் குறளினியின் படைப்பாற்றல் இன்றைய நவீன...
1 3 4 5 6 7 16
Page 5 of 16
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!