ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 36
அன்று மாலை மருத்துவர்களின் பரிந்துரை படி வீட்டிற்கு சரவணன் வருகிறார். மருத்துவர் சொன்ன அனைத்து விஷயத்தையும் வீட்டிலுள்ள அனைவருக்கும் சொல்லி எச்சரிக்கை செய்கிறான் செழியன். அவருக்கு எந்தவித அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தையும் சொல்லவே கூடாது என்று அனைவருக்கும் எச்சரிக்கிறான். சரவணனிடம் செழியன் "நீங்கள் கொஞ்சநாள் ஓய்வெடுங்கள்.... கடையை நான் ஒரு ஆள் வைத்து பார்த்துக் கொள்கிறேன். வேலை முடித்துவிட்டு வந்த மீதமான நேரங்களில் நானே கடையை பார்த்துக் கொள்கிறேன். அதனால்...