archiveஇலக்கியம்

கவிதை

குழந்தை மனது

கூரை வீட்டுக்குள் கொட்டும் மழை; குழந்தை மனதிற்குள் குடைக்குள் மழை! சாலையில் நேற்றய மழைநீர் வெள்ளம்; குழந்தை மனதிற்குள் காகிதக் கப்பல்! நிரந்தர வேலையில்லை அப்பாவின் நடைமுறை; குழந்தை மனதிற்குள் ஞாயிறு விடுமுறை! வேளைக்கு உணவில்லை அம்மாவின் வேதனை; குழந்தை மனதிற்குள் சாம்பலில் பூனை! கொடுக்கப் பாலில்லை அம்மாவின் ஏக்கம்; குழந்தை மனதிற்குள் விரல்சூப்ப விருப்பம்! தெருவிளக்கில் படிப்பு அண்ணனின் அவதி; குழந்தை மனதிற்குள் ஞானத்தின் ஜோதி! அக்காவின் உடைந்த...
கவிதை

சு. அனந்த பத்மநாபன் கவிதைகள்

கொஞ்சம் முயன்றால் பாடலின் முதல் வரி எண்ணத்தில் விரியும்; கொஞ்சம் முயன்றால், கவிதை சுரக்கும்! முட்டையின் உள்ளே சின்னக் கீறல்; கொஞ்சம் முயன்றால், புத்துயிர் பிறக்கும்! தவழும் குழந்தை - நகரா பொம்மை; கொஞ்சம் முயன்றால், எட்டிப் பிடிக்கும்! கல்வியும் கலையும் அறிவு புகட்டும்; கொஞ்சம் முயன்றால், என்றும் நிலைக்கும்! உழைப்பும் தொழிலும் வாழ்வு கொடுக்கும்; கொஞ்சம் முயன்றால், எல்லை விரியும்! அன்பும் பண்பும் அறிமுகம் கொடுக்கும்; கொஞ்சம் முயன்றயால்,...
Uncategorizedகவிதை

அறவோர் அடிப்படை

உண்மை அறி நன்மை புரி தீமை எரி - இந்தத் திரட்சியே பெளத்த நெறி! * நன்மையின் தொகுப்பு அன்பம்! தீமையின் தொகுப்பு வன்மம்! * நல் மனம் நறுமணம் நாலாபக்கமும் வீசும் பூக்களின் குணம்! நல் எண்ணம் நல்லொழுக்கம் நன்மை பேசும் சந்தன மணம்! தம்மம் தலையாகும் கம்மம் வினையாகும்! * இன்றைய நன்மையால் என்ன பயன் என எண்ணும் ஏ மனிதா! நாளைய வரலாறு சொல்லும் உன்...
கவிதை

பிரபா முருகேஷ் – கவிதைகள்

என்னிடம் கேட்பாயா நீ மனதின் .... சலனங்கள் கேள்விகள் விசாரணைகள் கூச்சல்கள் எண்ணத்தின் பரிபாஷைகள் விஷமத்தின் பகடிகள் தங்கு தடையற்ற கற்பனைகள் நீயாக நான் வியாபிக்கும் தருணங்கள் வெண்பஞ்சு மேகங்களை அழைத்து செல்லும் வானம் போல அனைத்துக்கும் செவி சாய்க்கும் புத்தியின் கொண்டாட்டங்களை மழையின் ஈரத்தை உள் வாங்கும் பெண்ணாக ......... என்னிடம் கேட்பாயா நீ சாதிகளற்ற சமுதாயத்தில் சாதிகளற்ற சமுதாயத்தில் குழந்தைகள் பயமின்றி தெருக்களில் விளையாடும் விளையாட்டு முற்றத்தில்...
கவிதை

இரக்கம் சுரக்கம் இறைவன் கரம்

எங்கும் எதிலும் இன்னும் மிச்சமிருக்கிறது ஈரம்... மனிதாபிமானம் என்பது மனதின் ஈரம்... விழிகளில் நீரிருக்கும் காலமெல்லாம் இருக்கும்... கடலில் அலையிருக்கும் காலமெல்லாம் சுரக்கும்... எங்கேயோ ஓர் இடறல் கேட்டால் இதயம் துடிக்கிறதே... எங்கேயோ ஓர் அரற்றல் கேட்டால் கண்ணீர்த் துளிர்க்கிறதே... வெயில் கொளுத்தி நாவறளும் வேளைகளில் எல்லாம் வந்து கொட்டும் மழையைப்போல வந்து கைகொடுக்கிறது மனிதாபிமானம்... பெருமழைக் காலங்களில் படகுகளின் துடுப்புக்களின் துழாவல்களில் நீங்கள் அதைப் பார்க்கலாம்... இந்துத்தாய் பெற்றெடுத்த...
இலக்கியம்சிறுகதை

மனம் நனைத்துப் போனவள்

இரு பத்து ஆண்டுகளாக அவள் பரிச்ச யம். பார்வைப் பரிச்சயம். பேசிய சொல் ஒன்று கூட இல்லை. முறைத்தபடிதான் பார்ப்பாள். அல்லது பார்த்தால் முறைப் பாள். அவளிடம் பேசும் எண்ணமென எதுவும் இருந்ததில்லை. அவள் தேவதை .. என்றெல்லாம் புரூடா விடத் தயாரில்லை. சாதாரண ஒரு இல்லத்தரசியின் தோற்றச் செழுமை. திடமான உடல். மாநிறம். சிறுகடை ஒன்றில் இருப்பாள். சென்ற மாதம் எதோ வாங்கின போது சடசட வென நிறுத்தி...
இலக்கியம்கட்டுரை

பதேர் பாஞ்சாலி உருவான பாடுகளின் கதை

சத்யஜித் ரேயின் சினிமா ஆசை அவர் லண்டனில் இருந்தபோதுதான் அவருக்கு ஏற்பட்டது. அங்கே அவர் பார்த்த பைசைக்கிள் தீவ்ஸ் ஆங்கிலப்படம்தான் அவருள்ளிருந்த ஒரு சினிமா படைப்பாளியை உசுப்பிவிட்டது. அந்த பைசைக்கிள் தீவ்ஸ் படம்போலவே ஒரு இயல்பான சினிமாவை உருவாக்கவேண்டும் என்று அவர் தன் மனதில் நினைத்தபோதே அவருள் தோன்றிய கதைதான் பதேர் பாஞ்சாலி. அது வங்கத்தின் பிரபல எழுத்தாளர் விபூதி பூஷண் பேனர்ஜி எழுதிய நாவல். அது நாவலாக வெளிவரும்...
இலக்கியம்கவிதை

இதழ்களை பொறுக்கி புத்தகங்களில் பதியம் வைக்கிறேன்……!

கில்லி மாதிரி நல்ல ஒல்லி அவள் துள்ளல் நடை. துவளும் ஒற்றை ஜடை இடை தினம் ஒரு ரோஜா சூடி கலகலச் சிரிப்புடன் கலக்கலாகவே ஒரு நடை நடப்பாள் நடையின் அதிர்வில் ரோஜா இதழ்கள் உதிரும் அவளறியாமல் இதழ்களை பொறுக்கி புத்தகங்களில் பதியம் வைப்பேன்.. சில இதழ்களை தின்று சுகித்த தினங்களும் உண்டு நல்ல நிறம் அவள் அரிசிப் பல்லும், கூர் நாசியும், குருவி இதழ்களுமாக தெருவின் புதிய வசீகரம்...
நிகழ்வு

‘தாளடி’ நாவலுக்கு வடசென்னை தமிழ் சங்கம் வழங்கிய வீரமாமுனிவர் படைப்பிலக்கிய விருது

ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜன் அண்மையில் எழுதிய நாவல் 'தாளடி' இந்த நாவல் இதுவரை 5 விருதுகளை பெற்றிருக்கிறது. 'தாளடி' என்ற இந்த புனைவின் மொழி சொற்சித்திரங்களை வரையும் கவிதை மொழி.  சீனிவாசன் நடராஜனின் இந்த நாவல் ஒரு அரிய முன்னெடுப்பு.  வடிவத்தில் ஒரு புதிய வகைப்பாட்டை வெற்றிகரமாக பார்த்திருக்கிறார் - மாலன். 'தாளடி 1967' எதிர்காலத்தின் முன்னுரை - சந்தியா நடராஜன். மனசாட்சியோடு உரையாடும் நாவல் - சு.தமிழ்செல்வி....
சிறுகதை

கடைசியாக ஒரு கவிதை

ததும்பிக் கொண்டிருந்தது சந்தோஷம். எக்கணமும் வழியத் தயாராகி விட்டதைப் போலவும்கூட. கடகடவென பறந்து வந்து அமரும் புறாக்களாக, மனதில் முகிழ்த்த கவிதைக்கான வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன. பூக்களின் பின்னணியில், வண்ணத்துப் பூச்சிகளின் சிறகடிப்புகளைப் போல உணர்வுகள் நுரைத்துக் கொண்டிருக்க ஜோவிற்கு சிறகுகள் முளைத்திருந்தன. மனதுள் பதிந்து கொண்டிருந்த காட்சிகள், இன்றைக்கென்று அப்படியானதொரு லயத்தில் ஒரு ஸிம்பனிக்கான காட்சிக் கோப்புகளைப் போல அமைந்திருந்தன. அது மழையென்று சொல்ல முடியாத ஊட்டிக்கே உரித்தானதொரு...
1 8 9 10 11 12 16
Page 10 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!