தமிழகம்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள்

252views
தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் செம்மரம் தேக்கு ,குமிழி, நாவல், நெல்லி , கொடிக்காபுளி , வேங்கை, மகோகனி போன்ற மரக்கன்றுகள் சுமார் 21,000 ராஜபாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வந்துள்ளன தேவைப்படும் விவசாயிகள் தங்களுடைய விபரங்களை உழவன் செயலில் பதிவு செய்து இராஜபாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பெற்றுக்கொள்ள இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திரு க. திருமலைச்சாமி. அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் .மேலும் விவசாயிகள் விவசாயிகள் வரப்பு ஓரம் நட ஹெக்டேருக்கு 160 கன்றுகள் வீதம் 2 ஹெக்டேருக்கு 320 ம் குறை அடர்வு முறையில் பண்ணையில் வரிசையாக நடஹெக்டேருக்கு 500 வீதம் இரண்டு ஹெக்டேருக்கு ஆயிரம் என்ற வகையில் விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் வழங்கப்படுகிறது எனவே அனைத்து விவசாயிகளும் வாங்கி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலு‌ம் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!