தமிழகம்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

197views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையில் விடப்பட்டது.  திருநகரை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மதியம் ஒரு மணி அளவில் கழிப்பறையில் பாம்பு ஒன்று புகுந்தது. இதை அடுத்து வட்டாட்சியர் பார்த்திபன் திருநகரில் உள்ள சினேக் சகா என்பவரிடம் தகவல் அளித்தார். உடனடியாக அவர் வருவதற்குள் பாம்பு கழிப்பறையில் இருந்து அலுவலகத்துக்குள் புகுந்து விட்டது. அங்கு வந்த சினேக் சகா சுமார் அரை மணி நேரம் தேடி பாம்பை பிடித்தார். தொடர்ந்து பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது. திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் திடீரென பாம்பு புகுந்த சம்பவம் அலுவலர்கள் மற்றும் அங்கு வந்த பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!