தமிழகம்

சிவகாசியில் பலத்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

98views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.  சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகலில் தொடர் தூறல் மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு பின்பாக மழை நின்றது. ஆனாலும் தொடர்ந்து மேகங்கள் திரண்டு வந்தன. இந்த நிலையில், சிவகாசி நகர் பகுதியில் திடீரென்று பலத்த மழை பெய்யத் துவங்கியது. சுமார் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. திடீர் மழை காரணமாக நகரின் பல இடங்களில், மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பின்பு சிவகாசி பகுதியில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!