தமிழகம்

ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு விழா

45views
சிவகங்கை மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு நடத்திய ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு விழா நிகழ்ச்சி சிவகங்கை காவல் உட்கோட்டம் இளையான்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இளையான்குடி, சாகிர் உசேன் கல்லூரியில் 29.08.2024 அன்று (mass awareness programme) சிறப்பாக நடைபெற்றது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. L. பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிவகங்கை மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் திரு துஷாந்த் பிரதீப் குமார், சிவகங்கை உட்கோட்டா காவல் துணை கண்காணி ப்பளர் திரு அமல அட்வின் , கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான், இளையான்குடி வட்டாட்சியர் திரு. முருகன், இளையான்குடி காவல் ஆய்வாளர் திரு. ஜோதி முருகன்ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இவ்விழாவினை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் திரு. கண்ணதாசன் தொகுத்து வழங்கினார். 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தீண்டாமை மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. காவல் துறையின் போதை பொருள் ஒழிப்பு, குழந்தை பாதுகாப்பு குறித்த குறும்படம் திரையில் காட்டப்பட்டது.

ஒற்றுமையே உயர்வு என்ற தலைப்பில் நடைபெற்ற மெகா ஓவிய போட்டியில் 60 மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகள் சயீத் சனோபார் முதல் பரிசு, அபிதா இரண்டாம் பரிசு, விசாலி மூன்றாம் பரிசு ஆகியோறுக்கு அப்துல்கலாம் அவர்களின் அக்கினி சிறகுகள் புத்தகம் பரிசு அளிக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழங்கி சிறப்பித்தனர்.விழா முடிவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆத்மநாதன் நன்றி தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் சார்பு ஆய்வாளர்கள் சிறப்பு சார்பாவாளர்கள், தலைமை காவலர்கள் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!