தமிழகம்

சிலம்பம் மற்றும் யோகா மூலம் சாதனை படைத்த மாணவர்கள்

270views
சிலம்பம் மற்றும் யோகா மூலம் சாதனை படைத்த மாணவர்கள் மேலும் பல சாதனை புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் – காவல் உதவி ஆணையர் சண்முகம் மதுரை திருப்பரங்அருகே வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலம்ப மாணவர்கள் 20 பேர் 2 மணி நேர சிலம்பம் மற்றும் யோகா பயிற்சிக்காக நோபல் புக் ஆப் ரெக்கார்டில் சான்றிதழ், பதக்கம் பெற்றுள்ளனர்
சிலம்ப மாணவர்களின் அரிய சாதனையை பாராட்டி காவல் உதவி ஆணையாளர் சண்முகம் அவர்களுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் பைரவர் சிலம்ப கலைக்கூடம் என்ற பெயரில் சிலம்பம் மற்றும் யோகா பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.
இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் மற்றும் யோகா பயிற்சி அளித்து வருகிறார். இதில் இரண்டு மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் மற்றும் யோகா பயிற்சி செய்ததற்காக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற அமைப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்துள்ளது.

இப்பாராட்டு விழா நிகழ்ச்சியில் மதுரை மாநகர் காவல் உதவி ஆணையர் சண்முகம் சிலம்பம் மாணவர்களிடம் வாழ்த்துக்களை கூறி சான்றிதழ் கேடயம் பதக்கங்களை வழங்கினார் .
அவர் மாணவர்களிடம் கூறும் போது மிக அரிய சாதனையாக சிலம்பம் மற்றும் யோகாவில் சாதனைப்படைத்துள்ளீர்கள் வரும் காலங்களில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் மென்மேலும் வளர மனதார வாழ்த்துக்கள் என கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!