185
ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடன் அந்த நாளுக்கு நன்றி சொல்லுங்கள். அது போல் அன்றைய இரவு தூங்கப் போகுமுன் ஒரு பயிற்சியாக நினைத்து உங்களுக்கு நடந்த மூன்று நல்ல செயல்களை நினைவு கூர்ந்து அதற்காக நன்றி சொல்லுங்கள்.
அந்த மூன்று, இன்னும் பல நடந்த நல்லவைகளை உங்களுக்குள் நினைவு வர செய்யும். அது இன்னும் பல பாஸிடிவான நிகழ்வுகளை உங்கள் வாழ்க்கையில் ஈர்க்கும்.
தவிர, அந்த மாதிரி இரவில் நினைத்து விட்டு தூங்கும் போது அடுத்த நாள் அதே நன்றியுணர்ச்சியோடு மகிழ்ச்சியோடு நீங்கள் விழிப்பீர்கள். ஏனென்றால் ஆழ்ந்த உறக்கத்தில் உங்கள் ஆழ்மனது நீங்கள் நினைவு கூர்ந்தவைகளை எல்லாம் தன்னுள் அப்படியே ரெகார்ட் பண்ணிக் கொள்ளும். அதை தக்க வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் அது போல் நீங்கள் நன்றி செலுத்தக் கூடிய விஷயங்களை இந்த பிரபஞ்சத்தின் சக்தியோடு உங்களுடைய வாழ்க்கையில் பலவாறு ஈர்க்கும். மகிழ்ச்சி மலரும்.
டாக்டர் ஃபஜிலா ஆசாத்,
வாழ்வியல் மற்றும் மனநல நிபுணர்
add a comment