தமிழகம்

எஸ் டி பி ஐ ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்

47views
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநில தலைவர் உடனான சந்திப்பு கலந்தாலோசனை கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றன வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் வரவேற்புரை நிகழ்த்தினார் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தொகுப்புரையாற்றினார். மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸ்ருதீன் துவக்க உரை நிகழ்த்தினார்.  மதுரை வடக்கு தெற்கு மாவட்ட  நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்,தொகுதி வார்டு ஒன்றிய கிளை உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் கலந்து கொண்டு உரையாற்றினர்.வஹாப் விருதுநகர் மாவட்ட தலைவர் நன்றியுரை வழங்கினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!