தமிழகம்

பாரதி – மகாத்மா பண்பாட்டுப் பேரவையின் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாண்வர்களுக்கு நடத்தப்படும் மாபெரும் பேச்சு போட்டி

17views
பாரதி – மகாத்மா பண்பாட்டுப் பேரவையின் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாள் விழாவும் 30ஆம் ஆண்டு பைந்தமிழ்ப் பெருவிழாவும் அக்டோபர் இரண்டு மூன்று நான்கு தேதிகளில் நடைபெற உள்ளன.
இவ்விழாக்களையொட்டி அனைத்துக் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.  அப்போட்டிகளின் தேர்வுச் சுற்று இன்றைக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆசிரியை சித்ரா சேகர் ஆசிரியை மங்கையர்க்கரசி நண்பர் கவிஞர் பிரகாஷ் ஆகியோர் நடுவர்களாக வருகை தந்தனர். போட்டிகளை பேரவையின் துணைச்செயலாளர் திருமதி ஐஸ்வர்ய லட்சுமி பேரவையின் இணைச் செயலர் புலவர் இரா நக்கீரன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவர்களுக்கும் அன்போடு உதவிய நடுவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் பேரவை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விழா மேடையில் சிறப்பிக்கப்படுவதோடு அவர்களின் திறமைகளை வெளிக்காட்ட நிறைவுச் சுற்று வாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!