தமிழகம்

மதுரையில் நீர் வரத்து கால்வாய்களில் மீண்டும் சாயக்கழிவுகள் – வெள்ளை நிறமாக மாறும் கால்வாய்கள் – தொற்று நோய் பரவும் அபாயம்.

42views
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வண்டியூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மற்றும் பெயிண்ட் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது,
இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியே வரும் கழிவுநீர்களை அந்த பகுதியில் இருக்கக்கூடிய நீர்வரத்து வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்துள்ளது
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாய்க்காலில் பெயிண்ட் நிறுவனம் ஒன்று சாயக்கழிவுகளை கலந்ததால் வாய்க்கால் முழுவதும் சிவப்பு நிறமாக மாறி தொடர்பாக நியூஸ்7 தமிழ் ஆனது செய்தி வெளியிட்டு இருந்தது,  அதன் எதிரொலியாக அந்த நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கால்வாய்கள் வெள்ளை நிறமாக மாறி உள்ளது.  நீர் வரத்து வாய்க்கால்களில் கழிவுநீர்களை கலக்கக்கூடாது என அந்த பகுதி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் எச்சரிக்கை மீறி தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகள் மீதும் நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மாநகராட்சி எடுக்க வேண்டும்.
மேலும்,அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  ஆகையால் முறையாக தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!