தமிழகம்

சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் – மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு தரிசனம்

105views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இன்று மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்காக சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து சதுரகிரிமலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று அதிகாலை சுந்தரமகாலிங்கம் சுவாமி மற்றும் சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை 17ம் தேதி (சனி கிழமை) அன்றும், கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!