தமிழகம்

அறம் செய்து உலகில் தடம் பதிக்க வேண்டும்: ரோட்டரி ஆளுநர் ஆனந்த ஜோதி பேச்சு

157views
அறம் செய்து உலகில் தடம் பதிக்க வேண்டும் என்று ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேசினார். இது பற்றி விவரம் வருமாறு. மதுரை நெக்ஸ்ட் ஜென் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி பவுண்டேஷன் கருத்தரங்கு அழகர் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி தலைமை தாங்கினார்.
பன்னாட்டு ரோட்டரி பவுண்டேஷன் டிரஸ்டி பரத் பாண்டியா, முன்னாள் ஆளுநர்கள் முருகானந்தம், தாமோதரன் புருஷோத்தமன், ஜமீர் பாஷா, ஜெயக்கன் உட்பட பலர் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேசியதாவது இந்த ஆண்டு 882 புதிய உறுப்பினர்களை ரோட்டரி மாவட்டம் 3000 சேர்த்து சாதனை படைத்திருக்கிறது 9 புதிய சங்கங்களும் 2 சேட்டிலைட் சங்கங்களும் இதில் அடங்கும். அறம் செய்வதற்கு நல்ல கரம் வேண்டும். இந்தாண்டு 25 லட்சம் டாலர்கள் ரோட்டரி பவுண்டேஷனுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதுவரை 10 லட்சம் டாலர்கள் வந்திருக்கிறது.
ரோட்டரி பவுண்டேஷன்க்கு பணம் கொடுப்பது மூலம் அது நமக்கே மீண்டும் சேவை திட்டங்களாக வரும். போலியோ உலகில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டாலும் இரண்டு நாடுகளில் இன்னும் இருக்கிறது. ஆகவே போலியோ முற்றிலுமாக ஒழியும் வரை நமது சேவை இருக்க வேண்டும். அறம் செய்து இந்த உலகில் ஒவ்வொருவரும் தடம் பதிக்க வேண்டும். இவ்வாறு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேசினார் நிகழ்வில் தமிழறிஞர் சுகிசிவம் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது.. உலகில் நமக்கு கொடுக்கிற பழக்கத்தை முதலில் கற்றுக் கொடுத்தவர்கள் அம்மாவும் பாட்டியும். தாய் கொடுப்பது தாய்மையின் அடையாளம். கொடுப்பதற்கு உலகில் மரியாதை உண்டு. கொடுக்கின்ற பழக்கம் இல்லை எனில் உலகம் உங்களை மதிக்காது என்கிறார் கம்பர். கொடுக்கிற மனிதனை இந்த உலகம் கொண்டாடும். பொய் சொல்லாமல் இருப்பது திருடாமல் இருப்பது ஒழுக்கமாக இருப்பது என்பது கூட அறம்தான். அறம் என்பதை பசித்தவர்களுக்கு உணவளித்தல் என்று கூட சொல்லலாம். இன்னொருவர் துக்கத்தை தன்துக்கமாக கொண்டாடுவது அறம். பிறர் வாழ வேண்டும் உலகம் வாழ வேண்டும் என்று சொல்கிறவன் வணங்கப்பெற்றவன். கொடுப்பதில் தான் உலகில் இன்பம் இருக்கிறது இவ்வாறு தமிழறிஞர் சுகிசிவம் பேசினார்.
நிகழ்வில் ரோட்டரி அறக்கட்டளை டிரஸ்டி பரத் பாண்டியா, ஆளுநர்கள் ராஜா கோவிந்தசாமி, பெரம்பலூர் கார்த்திக், முன்னாள் ஆளுநர்கள் முருகானந்தம், டாக்டர் ராஜசேகர், தாமோதரன், டாக்டர் ஜமீர் பாஷா, புருஷோத்தமன், ஜெயக்கண், உட்பட பலர் பங்கேற்றனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ரோட்டரி பவுண்டேஷன் மாவட்ட தலைவர் குமரப்பன் கருத்தரங்கு தலைவர் நஜேந்தர், மதுரை நெக்ஸ்ட் ஜென் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜீவ் செயலாளர் வருண் உட்பட பலர் செய்திருந்தனர்
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!