தமிழகம்

காவனூரை சேர்ந்த கட்டுமான தொழிலாளி விபத்தில் மூளைச்சாவு, உடல் உறுப்பிகள் தானம், 5 பேருக்கு வாழ்வு தந்தார் தினேஷ்குமார் !!

123views
இராணிப்பேட்டை மாவட்டம் காவனூரை சேர்ந்த தினேஷ்குமார் (28). இவர் டிப்ளமா முடித்து கட்டுமான தொழில் செய்துவந்தார்.
இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி தனது 2 சக்கர வாகனத்தில் கண்ணமங்கலம் கூட்ரோட்டில் சென்றபோது, வாகனம் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த தினேஷ், இராணிப்பேட்டை கிளை சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதனையெடுத்து அவரின் குடும்பத்தினரின் ஒப்புதலோடு உடல் உறுப்புகளான இதயம், கண்கள், லிவர், கிட்னி முறையே சென்னைஎம்ஜிஎம் , வேலூர் சிஎம்சி, இராணிப்பேட்டை சிஎம்சி, வேலூர் நாராயணி என உடல் உறுப்புகள் பிரித்து அனுப்பி நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. தான் (தினேஷ்குமார்) இறந்தும் 5 பேருக்கு வாழ்வு கொடுத்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!