தமிழகம்

ராமநாதபுரம் வருவாய் துறையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை

203views
ராமநாதபுரம் வருவாய் துறையில் பணி காலத்தில் மரணமடைந்த 2 பேரின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பணி நியமன ஆணை வழங்கினார்.  பரமக்குடி அருகே கொடிக்குளம், முதுகுளத்தூர் அருகே புளியங்குடி விஏஓ வாக பணிபுரிந்து, பணி காலத்தில் மரணமடைந்த மாரிமுத்து, சதீஷ் ஆகியோரின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!