தமிழகம்

எஸ்டிபிஜ கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மாநாடு – 9 தீர்மானம் நிறைவேற்றம்

84views
ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 5 அம்ச கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்ற தொகுதி மாநாடு சந்தை திடலில் நடந்தது. மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் அப்துல் ஜமீல் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் துவக்க உரை ஆற்றினார் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசினார். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு எஸ்டிபிஐ  கட்சியில் புதியதாக இணைந்த பெண்களுக்கு உறுப்பினர் அட்டை  2022- 23 கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவி சுபஸ்ரீக்கு பரிசு மற்றும் கேடயம் ஆகியவற்றை  மாநில தலைவர் நெல்லை முபாரக்  வழங்கினார். எஸ்டிபிஐ கட்சி மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, விம் மாநில தலைவர் பாத்திமா கனி, மாநில செயலாளர்கள் ரத்தினம், அபுபக்கர் சித்தீக், அகில இந்திய பார்வார்டு பிளாக் தேசிய துணைத் தலைவர் கதிரவன், பனைத் தொழிலாளர் நலச்சங்கம் மாநில தலைவர் சதாசிவம், மே17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இமானுவேல் சேகரன் புதல்வி சுந்தரி பிரபா ராணி ஆகியோர் பேசினர்.

மாவட்ட பொதுச்செயலர் பாஞ்சு பீர் நன்றி கூறினார். இஸ்லாமிய சிறைவாசிகள் 37 பேரை விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும். அழிந்து வரும் விவசாய தொழிலை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பனைத் தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் வளத்தை அதிகப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக முதலமைச்சர் தலைமையில் மாநில கல்வி கொள்கை குழு உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அகதிகள் முகாமிகள் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் வக்ப் வாரியம் மூலம் கல்வி நிறுவனங்கள் துவங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய 9 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!