தமிழகம்

அழகன்குளம் நஜீயா மெட்ரிக் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருக்கு புது டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது

200views
இராமநாதபுரம் :
இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் உள்ள நஜீயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அப்பாஸ் அலி. அவருக்கு சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளருக்கான விருது வருகின்ற மே மாதம் 9 தேதி அன்று புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட உள்ளது.
துபாய், பங்களாதேஷ், நேபாளம், மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்ற இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்த சிறந்த பயிற்சியாளருக்கான விருது இவருக்கு வழங்கப்படுகிறது. இவரின் இந்த சேவையை பாராட்டும் விதமாக மத்திய மாநில அரசுகள் இவருக்கு உண்டான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பது நம் அனைவரின் வேண்டுகோள் ஆகும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!