உலகம்

துபையில் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை நடாத்திய புனித பாத்திமா நாயகியார் (ரலி) மாலை புகழ்ப்பா ஓதுதல் மற்றும் இப்தார் (நோன்பு) திறக்கும் நிகழ்வு.

142views
2/3/2025 அன்று துபை நகரில் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகவும் சிறப்பான முறையில் ”பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்’ மிகவும் விமர்சையுடன் நடைபெற்றது. மாலை 4:15 மணிக்கு புகழ் மாலை ஓதும் மஜ்லிஸ் துவங்கியது. எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மகளார் பரிசுத்த பாத்திமா நாயகி (ரலி) அவர்களின் வாழ்வியலை முழுமையாக தெளிவுப்படுத்தும் விதமாக இறைஞானத் தமிழ் இலக்கியஞானி ஜே. எஸ். கே. ஏ. ஏ. எச். மௌலானா அவர்கள் யாத்தளித்த இப்புகழ் மாலை சிறப்பாக ஓதப்பட்டது.
சங்கைமிகு மௌலானாமார்கள் முன்னிலைவகிக்க நிகழ்வில் கலீபா இஞ்சினியர் முனைவர் சஹாப்தீன் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றுப்பேசினார். அதைத்தொடர்ந்து சங்கைமிகு ஸெய்யித் அலி மௌலானா உரையாற்றினார்கள்.
தொடர்ச்சியாக தமிழகத்திலிருந்து வந்துள்ள மௌலவி ஹஜ்ரத் முஹம்மது அபுபக்கர் பைஜி உலவி சொற்பொழிவாற்றினார். பின்னர் கலீபா இஞ்சினியர் முனைவர் முஹம்மத் இக்பால் உரையாற்றினார்.
நிறைவாக இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வோடு இந்நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சில் அமீரகத்தின் பல அமைப்புகளைச்சார்ந்தவர்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட ஆலோசகர் வழுத்தூர் அப்துல் ரவூப், அதிரை S.ஷர்புத்தீன், K.S.அப்பாஸ் ஷாஜஹான், ஜமால் மைதீன்(பொதுச் செயலாளர், ஜமால் முஹம்மது காலேஜ் முன்னாள் மாணவர் சங்கம்), பரக்கத் அலி (உதவிச் செயலாளர், காயிதே மில்லத் பேரவை), இரவி முத்து,(தலைவர், அமீரக செந்தமிழர் பாசறை), மேலும் அமீரகத்தின் பல பகுதிகளை சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் விழாக்குழுவினர் (அஹமது தஷ்ரீப், அமீர் அலி, சார்ஜா முஹம்மத் ஸாதிக், அபுதாபி ஜஉபர் ஸாதிக், அப்துல் ஹாதி) செய்து இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!