தமிழகம்

20 நாட்களுக்குப் பிறகு மதுரையில் பகுதியில்பலத்த மழை

163views
மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மதுரை மாவட்டம் வடக்கு பகுதியான புதூர் தல்லாகுளம் மாட்டுத்தாவணி அண்ணா நகர் பி பி குளம் கிருஷ்ணாபுரம் காலனி கே கே நகர் கோரிப்பாளையம் செல்லூர் ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது இதனால் வாகன ஓட்டிகளும் மற்றும் வேலைக்கு விட்டு வீட்டுக்கு செல்வது கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் ஒரு மணி நேரம் கழித்து தென்பகுதியான பழங்காநத்தம் காளவாசல் அரசர்அடி மாடக்குளம் டிவிஎஸ் நகர் திருப்பரங்குன்றம் ஜெய்ஹிந்த்புரம் முடக்கு சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.  இம் மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!