உலகம்

மூத்த தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவரகள் எழுதிய நூல்கள் திறனாய்வு அரங்கு

160views
சங்கைக்குரிய ஷைகு நாயகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் அலி மௌலானா அவர்களின் அறிவுறுத்தலின்படி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, கத்தார் சார்பில் மூத்த தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் இயற்றிய “பாத்திமா நாயகியார் மாலை”, “பாலைவனம்”, “குறிஞ்சிச்சுவை”, “இறையருட்பா”, “உமர் (ரலி) புராணம்” உள்ளிட்ட அவர்களின் அனைத்து தமிழ் நூல்களையும் மையமாகக் கொண்டு திறனாய்வு அரங்கு மிக விமர்சையாக வெள்ளிக்கிழமை 20.02.2026 அன்று Doha Ultimate Restaurant Auditorium அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஸெய்யித் அப்துல் ஹை மௌலானா அவர்கள் தலைமை தாங்கினார். மௌலானாமார்கள் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் கலைமாமணி தி.மு. அப்துல் காதர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். தமது உரையில், மௌலானா அவர்களின் மேற்கண்ட தமிழ் நூல்களின் இலக்கியச் சிறப்பையும், கவித்திறனையும், ஆழ்ந்த தமிழ் புலமையையும் விரிவாக ஆய்வு செய்தார். சங்ககாலத் தமிழ் மொழியின் செம்மையையும், பாரம்பரிய இலக்கிய மரபுகளையும் பின்பற்றி, இஸ்லாமிய ஆன்மிகப் பார்வையுடன் தமிழ் இலக்கியத்துக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளமை குறித்து அவர் சிறப்பாக எடுத்துரைத்தார்.
மேலும், மௌலானா அவர்களின் இஸ்லாமிய ஞானச் செயல்பாடுகள், சமூகப் பணிகள் மற்றும் தமிழ்ப்பற்று ஆகியவற்றையும் பாராட்டிப் பேசினார். கத்தாரில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக ANM முஹம்மத் யூசுப், ப.அப்துல் வஹாப், MNM அர்ஷாத் மற்றும் குழுவினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ஸெய்யித் முஃபீல் மௌலானா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியில், பங்கேற்பாளர்களுக்கு இஃப்தார் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு, நிகழ்வு ஆன்மிக மற்றும் இலக்கிய உற்சாகத்துடன் நிறைவுற்றது.
செய்தி:
ஏகத்துவ மெய்ஞ்ஞானத்தமிழ்ச்சங்கம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!