தமிழகம்

மதுரையில் மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

54views
மதுரையில்மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் குமார் மாநகரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், அரசரடி பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்ததைப் பார்த்து, தொடர்புடைய மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  அரசு ரெடி அருகே செயல்பட்டு வரும் தனியார் ஸ்கேன் மற்றும் மருத்துவமனையிலிருந்து கலக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குப்பைத் தொட்டியில் கலக்கப்பட்ட மருத்துவக் கழிவுகளும் துப்புரவுத் தொழிலாளர்களால் அகற்றப்பட்டது.  மேலும், மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பொதுமக்களை பாதிக்கும் வகையில் குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகளை கலப்பது தொடருமானால் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துச் சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!