தமிழகம்

தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து கடைகளில் மக்கள் வெள்ளம் – திருமங்கலத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் முன்னிலையில் கடையில் பொங்கல் இலவச பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

209views
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டில் உள்ள நியாய விலைக் கடைகளில், அந்த வார்டின் காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன், குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் இலவச பரிசு தொகுப்பினை வழங்கினார் .  மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு செய்வது விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து மக்கள் ஆர்வமுடன் கடையில் முன் அரசின் பொங்கல் பரிசை பெறுவதற்கு வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.  திருமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள நியாய விலை கடையில் நகராட்சியின் 23 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் முன்னிலையில், குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது இதில் ஏ. பாண்டியன் முன்னாள் கவுன்சிலர், துரை சண்முகம் வட்டச் செயலாளர் மற்றும் பால்பாண்டி நகர திமுக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!