சினிமா

18 மாதம்… 62 நாடுகள்.. 7 கண்டங்கள்: அஜீத்தின் அடுத்த அதிரடி ப்ளான்!

52views
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் – அஜித் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு’. முந்தைய படங்களை தயாரித்த போனி கபூரே இப்படத்தையும் தயாரித்து வருகிறார். இதில் மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். நீரவ்ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக பேங்காக்கில் நடைபெற்றது. அங்கு அஜித், மஞ்சு வாரியர் நடித்த முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேங்காக்கில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த சில படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவுக்கு ஷாக் கொடுத்தன.
‘துணிவு’ படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறா அஜித். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே கட்டமாக இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு, அடுத்து ஒரு மெகா உலக பைக் டூர் செல்ல திட்டமிட்டுள்ளார் அஜித்.
18 மாதங்களில் 62 நாடுகளுக்கு அஜித் பைக் டூர் செல்ல இருக்கிறார். பனிசூழ்ந்த அண்டார்டிகா உட்பட 7 கண்டங்களுக்கு அவர் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த 18 மாதங்களும், சினிமாவுக்கு விடுமுறை அளித்துவிட்டு இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அஜித். சமீபத்தில், தாய்லாந்திலும் அவர் பைக் டூரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!