தமிழகம்

உசிலம்பட்டி நகரப்பகுதியில் வெடி வெடித்தால் ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்.

234views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் நகர மன்ற தலைவர் சகுந்தலா துணைத்தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற கவுன்சிலர் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் 24 வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகள் வார்டு கவுன்சிலர்கள் குறைகளாக எடுத்து முன் வைத்தனர்.
அதனை தொடர்ந்து உசிலம்பட்டி பகுதிகளில் பட்டாசு வெடிக்கும் தனியார் மண்டபங்களில் விசேஷம் மற்றும் இல்ல விழாவில் கலந்து கொள்ள வரும் நபரிடம் பட்டாசு வெடிக்க கூடாது என தெரிவிக்க வேண்டும். மேலும் அதனை மீறி பட்டாசு வெடித்தால் தனியார் மண்டப உரிமையாளர் மீது ரூபாய் பத்தாயிரம் முதல் ரூ20 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும்.
மீண்டும் இதுபோல் செயலில் ஈடுபட்டால் காவல்துறையிடம் புகார் அளித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனை அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் தெரிவித்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!