தமிழகம்

தமிழுக்காக வாழ்ந்த பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரின் நினைவு இல்லத்திற்கு வந்து 20கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவிகள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

107views
மதுரை விளாச்சேரியில் உள்ள பரிதிமாற் கலைஞரின் இல்லத்தில் அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்,பல்வேறு அரசியல் கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில்,மதுரை திருப்பாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 20கும் மேற்பட்ட மாணவர்கள் தனது ஆசிரியர்களுடன் வந்து பரிதிமாற் கலைஞருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் ஆசிரியரான பரிதிமாற் கலைஞரின் திருவுருவ சிலையின் முன்பு தமிழ் மொழி பற்று குறித்தும் உறுதி மொழி எடுத்தனர்,
இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது மாணவிகள் அனைவரும் தமிழில் 95 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் இவர்களுக்கு தமிழுக்காக வாழ்ந்த ஒரு மனிதர் குறித்து எடுத்துரைக்க வேண்டும் எனவும் பரித மார் கலைஞரை புத்தகத்தில் மட்டும் தான் படித்துள்ளார்கள்,அவர் நம் மதுரையில் பிறந்து வளர்ந்தவர் எனவே அவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவும் எங்கள் பள்ளி மாணவிகள் தமிழ் மொழி குறித்தும் தமிழுக்காக வாழ்ந்த அற்புதமான கலைஞர் பற்றி மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளி ஆசிரியர்களே ஏற்பாடு செய்து இருந்தனர். சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பரிதமர் கலைஞர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!