தமிழகம்

பரமக்குடியில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரின் 39 ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி விழா தொடக்கம்.

40views
நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியா நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து நடத்தும் 39வது புத்தக கண்காட்சி துவக்க நிகழ்ச்சி எழுத்தாளர் நீ சு பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
பரமக்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் எம் சபரிநாதன் அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

முதல் புத்தக விற்பனை பிரதிதியை ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் எஸ் கே பி லெனின்குமார் பெற்றுக் கொண்டார்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் முதுநிலை விற்பனை சீரமைப்பாளர் அ கிருஷ்ணமூர்த்தி அவர்களும் மண்டல மேலாளர் ஆர் மகேந்திரன் அவர்களும் நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

புத்தகக் கண்காட்சி துவக்க தின விழாவில், தனி வட்டாட்சியர் பெ சேகர், சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் எஸ் ஜி ரங்கன் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் தமிழ் துறை பேராசிரியர் கவிஞர் இதயத்துல்லா, செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் பாலமுருகன், பணி நிறைவு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கவிஞர் நாகஜோதி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் இப்ராஹிம் , ஊடகவியலாளர் முதுவை இதயதுலா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பரமக்குடி கிளையின் சார்பில் எஸ் பி ராதா ,வழக்கறிஞர் ராஜேந்திரன், சி செல்வராஜ், கே ஆர் சுப்ரமணியன் கே ஆர் ரவீந்திரன், எஸ் சுப்பிரமணியன்,  டி ஆர் பாஸ்கரன் கோவிந்தன், வி ரமேஷ் பாபு, எழுத்தாளர் உரப்புளி ந ஜெயராமன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!