தமிழகம்

மாற்றுத்திறன் கிரிக்கெட் கேப்டனுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உதவி

83views
மாற்றுத்திறன் கிரிக்கெட் கேப்டனுக்கு அமைச்சர் நிதியுதவி அளித்தார்.  பாகிஸ்தானில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.  இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழச்செல்வனூர் வினோத் பாபு என்பவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் செல்ல நிதியின்றி உள்ளதாக செய்தி வெளியானது.
இதனை அறிந்த தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தனது சொந்த நிதியில் இருந்து உதவ நடவடிக்கை மேற்கொண்டார்.  இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் வினோத் பாபுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!