முக்கிய செய்திகள்
தமிழகம்

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று கவிப்பேரரசு வைரமுத்து பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்

துணைவேந்தர் திருவாசகம், நல்லி குப்புசாமி, VG சந்தோஷம், CPI(M) G. ராமகிருஷ்ணன், இயக்குனர் வ கௌதமன், இயக்குனர் பிருந்தா சாரதி, தயாரிப்பாளர் த. மணிவண்ணன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து உட்படத் தமிழன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்....
தமிழகம்

ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா! களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள்

கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு “ பொங்கல் விழா" நேற்றும் இன்றும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது. ஈஷாவில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கொண்டாட்டங்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வோடு துவங்கியது. இதில் ஈஷாவை சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர்...
கவிதை

பொங்கல் கவிதை : 2

பருத்திக்கொட்டை புண்ணாக்கு மட்டும் இல்லை சில நேரம் அகத்திக்கீரை கட்டுமாக செல்லமாகத்தான் இருந்தது எங்கள் லட்சுமி.. அம்மாவின் அதிகபட்ச வெள்ளிக்கிழமைகள் சாம்பிராணி வாசத்துடன் மனக்க ஆரம்பிக்கும் கடைக்குட்டி தம்பிக்கு மாற்றந் தாயாக லட்சுமி மாறிப்போனதில் ஒரு சுற்று பெருத்தே விட்டது எங்கள் வீடு அப்போது … கல்யாண சீதனமாக வீட்டிற்கு வந்ததிலிருந்து உழைத்துக் கொண்டுதான் இருக்கிறது அம்மாவைப் போல லட்சுமி… பால்காரம்மா ஊரை இப்படி அழைக்க நாங்கள் மட்டும் லட்சுமி...
இந்தியா

மகரஜோதியை தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்

ஐயப்பனின் மகரவிளக்கு திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி அளிக்கும் மகரஜோதியை பொன்னம்பல மேட்டில் காட்சி தந்ததை காத்திருத்த பக்தர்கள் தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனிடம் ஆசி பெற்ற மாவட்ட சேர்மன், துணை மேயர்

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் பொங்கல் முன்னிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், வேலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு மற்றும் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
கவிதை

கண்மூடிய புத்தனின் சரிந்த சிரம்

உவகையின் உயிரறுந்து அந்தரத்தில் தொங்கும் நடுராத்திரிப் பிணம் வாழ்வு முக்கிச் சொட்டும் மூத்திரத்தின் இறுதித் துளிதான் என் பசும்பச்சைக் காலம் உறிஞ்சி செறித்துத் தள்ளிய கசடென கணக்கிறது ஜீரணமாகாத சில நினைவுகள் ரணமான மனதிற்கு கண்ணீரைக் களிம்பிடுவதால் மரத்துப்போகுமா வலி ? துரோகத்தின் துர்நாற்றதில் அனிச்சம் பூ அன்பை முண்டமாய் துடிக்கவிட்டுவிட்டு கண்மூடிய புத்தனின் சரிந்த சிரம்போல சிரிக்கிறது என் நரம்பறுந்த நம்பிக்கை நிகழ்பாரதி...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த திமுகவினர் !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பொங்கலன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவிக்க நீண்ட வரிசையில் நின்று சால்வை கொடுத்தனர். பதிலாக திமுக துண்டுகொடுக்கப்பட்டது.  இதில் தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார். வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு. பாபு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர்கள்...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தை மாத பொங்கல் விழா முன்னிட்டு வீடு, வீடாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த சீதா, ராமர், லட்சுமணன், அனுமான் உற்சவர்கள் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் பொங்கலன்று சீதாராமன் பஜனை கோயிலில் விசேஷ பூஜைகள் நடந்தன. சிறப்பு அழைப்பாளராக பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின் உற்சவர்களான சீதா, ராமன், லட்சுமணன், அனுமான் ஆகியோர் அலங்காரம் செய்யப்பட்டு நாதஸ்வர இசையுடன் வீதியில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்காரம் மற்றும் பூஜைகளை சாமியார் சசி குழுவினர் செய்து இருந்தனர். கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்....
கவிதை

போகிப் பொங்கல்

குப்பைக் கூளங்கள் விடுத்து மனக் குப்பைகள் எரி... அறிவு வளர்த்து அறியாமை எடுத்தெறி... எடுத்தெரி... நற்பண்பு மிகக் கொள் நச்சுகள் கொளுத்து... நாகரிகம் பேணு அநாகரிகம் அறு... திராவிடம் போற்று வீரத் தமிழனாய் உயர்ந்து நில்... நேரியம் காத்தல் செய் ஆரியம் அச்சம் கொள விடு... வர்ணாசிரமச் சாத்திரப் பகைவெல்-மாட்டு மூத்திரச் சாணியில் இயற்கை உரம் செய்... உழைப்புப் பேணுக... உழவைப் பேணுக... உழவரைப் போற்றுக... இயற்கைப் பேணுக.. ஏறு...
தமிழகம்

காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டு எதிரில் திமுக ஒன்றிய சேர்மன், ஒன்றிய செயலாளர் சட்டையை பிடித்து சண்டை : அமைச்சர் எச்சரிக்கை !!

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய சேர்மனாக வேல்முருகனும், காட்பாடி தெற்குபகுதி செயலாளராக கருணாகரனும் உள்ளனர். நேற்று பொங்கல் நிகழ்ச்சிக்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு வந்து இருந்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் அமைச்சரை சந்திக்க வந்திருந்தனர். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வேல்முருகனும், கருணாகரனும் சட்டையை பிடித்து அடிதடியில் ஈடுப்பட்டனர். என்ன செய்வது என்று காவல்துறையினர் அதிர்ச்சியில்உறைந்தனர். கட்சியினர் சமரசம் செய்து அமைச்சரிடம் அழைத்து...
1 2 3 4 5 955
Page 3 of 955

Right Click & View Source is disabled.

error: Content is protected !!