தமிழகம்

புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளையின் முப்பெரும் விழா; முக்கிய பிரமுகர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு..

106views
தென்காசி மாவட்டம் புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு துவக்க விழா, அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய வகுப்புகள் அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழா புளியங்குடி காயிதே மில்லத் திடலில் பார்ட் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெ. முகைதீன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் M. அல் அமீன் அனைவரையும் வரவேற்றார். பயிற்சி குழு தலைவர் M. அப்துல் பாஸித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் புளியங்குடி பெரிய பள்ளிவாசல் தலைவர் PNM மௌலல் கௌமி M.E. , ஜமாலியா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி ஹாஜா முகைதீன், கீழ பள்ளிவாசல் தலைவர் ஹாஜி ரிசவப்பா, வருவாய் ஆய்வாளர் அப்துல் கபூர், புளியங்குடி மருதம் பயிற்சி மையம் ஒருகிணைப்பாளர் கற்பக ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வக்பு வாரிய சேர்மன் M. அப்துல் ரஹ்மான் M.A., Ex.Mp., நெல்லை அல் பலாஹ் அகடாமி. நிறுவனர் தலைவர் அப்துல் ஹமீத் BMS, சங்கரன் கோவில் மனோ கல்லூரி முதல்வர் Dr.அப்துல் காதீர்,
தென்காசி பட்டய கணக்காளர் பாத்திமா பிர்தௌஸ் ஆகியோர் கல்வியின் அவசியம் உள்ளிட்ட முக்கிய கருத்துக்களை மையப்படுத்தி சிறப்புரை ஆற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆலிம்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், நிர்வாகிகள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பெண்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டார்கள். பார்ட் கல்வி அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் சாதனையாளர்களின் விபரங்களை புரஜக்டர் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அரசுப் பணிகளில் பணிபுரிபவர்கள், அரசுப் பணிகளுக்கு தேர்வானவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து கேடயம் கொடுத்து கௌரவப் படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6 முதல் 12 வரையிலான படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க 25 மாணவ மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக அறக்கட்டளையின் பொருளாளர் M. சேக் அப்துல் கரீம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!